இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் கொடிப்பங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 15.03.18 மாலை 06 மணியளவில் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் திரு இரவிச்சந்திரன் தலைமையேற்க திருவாடானை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.தமிழரசி அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முத்துராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சகாயராஜ் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி அ.ஜெயம் மற்றும் இப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரும் முன்னால் தொண்டி பேரூராட்சி தலைவர் திரு சேகு நெய்னா அவர்களும், முன்னால் உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டம் அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐயா நவநீதகிருஷ்ணன் அவர்களும், பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி உமாராணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு கணேசன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் உதவி ஆசிரியர் திரு சுதாகர் அவர்கள் நன்றி கூற தேசியக்கீதம் பாட விழா சிறப்பாக நிறைவு பெற்றது. கலை நிகழ்ச்சிகளை பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் திருமதி மேரிலதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தர்மலிங்கம்,உதவியாசிரியர்கள் திருமதி ஹெப்சிபாய் மற்றும் திருமதி உமா தேவி ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக