ஞாயிறு, 25 மார்ச், 2018

Phonetics

சிறு குழந்தையும் ஆங்கிலம் வாசிக்கும் அதிசயம்... 30 நாள்களில் ஆங்கிலத்தை எளிதாக வாசிக்க உதவும் phonetics ( ஆங்கில ஒலிகள் மூலம்) வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு...

Phonetics

சிறு குழந்தையும் ஆங்கிலம் வாசிக்கும் அதிசயம்... 30 நாள்களில் ஆங்கிலத்தை எளிதாக வாசிக்க உதவும் phonetics ( ஆங்கில ஒலிகள் மூலம்) வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு...

சனி, 17 மார்ச், 2018

ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி கொடிப்பங்கு ஆண்டு விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொடிப்பங்கு ஆண்டு விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொடிப்பங்கு.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் கொடிப்பங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 15.03.18 மாலை 06 மணியளவில் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் திரு இரவிச்சந்திரன் தலைமையேற்க திருவாடானை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.தமிழரசி அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முத்துராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சகாயராஜ் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி அ.ஜெயம் மற்றும் இப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரும் முன்னால் தொண்டி பேரூராட்சி தலைவர் திரு சேகு நெய்னா அவர்களும்,  முன்னால் உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டம் அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐயா நவநீதகிருஷ்ணன் அவர்களும், பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி உமாராணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு கணேசன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் உதவி ஆசிரியர் திரு சுதாகர் அவர்கள் நன்றி கூற தேசியக்கீதம் பாட விழா சிறப்பாக நிறைவு பெற்றது. கலை நிகழ்ச்சிகளை பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் திருமதி மேரிலதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தர்மலிங்கம்,உதவியாசிரியர்கள் திருமதி ஹெப்சிபாய் மற்றும் திருமதி உமா தேவி ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.

புதன், 7 மார்ச், 2018

TNPTF பொதுச்செயலாளர் அவர்களின் அறிவிப்பு.

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் அறிக்கை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⚡





*🌟பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 12வது மாநிலத் தேர்தல் வீரஞ்செறிந்த புதுக்கோட்டை மண்ணிலே மிகுந்த எழுச்சியோடும்,உற்சாகத்தோடும் நேற்று(04.03.2018)நடைபெற்றது*


*🌟இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டும்,தொழிற்சங்க இலக்கணத்தோடும்,உயர்ந்தபட்ச ஜனநாயக நெறிமுறைகளோடும் நடைபெற்ற அத்தேர்தலில் மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்றுச் சிறப்பித்த பேரியக்கத்தின் அனைத்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மால மையம் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது*


*🌟தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கத்தின் மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை காண்பதற்காக மாநிலம் முழுவதுமிருந்து புதுக்கோட்டைக்கு உணர்வுபூர்வமாக வருகைதந்து பார்வையாளர்களாகக்கலந்துகொண்டு சிறப்பித்த இயக்கத் தோழர்களை மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது*


*🌟மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை மிக நேர்த்தியாகவும்,ஜனநாயக மாண்புகளோடும் நடத்திட்ட தேர்தல் ஆணையாளர் தோழர்.செ.போத்திலிங்கம்(முன்னாள் பொதுச்செயலாளர்),துணைத்தேர்தல் ஆணையாளர்கள் தோழர்.எஸ்.ஜேம்ஸ்ராஜ்(முன்னாள் மாநிலத் துணைத்தலைவர்),தோழர்.அ.சுவாமிநாதன்(முன்னாள் மாநிலச் செயலாளர்)ஆகியோருக்கு மாநில மையம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறது*


*🌟புதிதாகப் பொறுப்பேற்ற மாநிலப் பொறுப்பாளர்களை நிகழ்வின்போது வாழ்த்தி மகிழ்ந்த நமது பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும்,இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொருளாளருமான தோழர்.தி.கண்ணண்,முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர்,முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர்.ச.ஜீவானந்தம்,தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.சங்கர் ஆகியோருக்கு மாநில மையம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது*


*🌟புதிதாகப் பொறுப்பேற்ற மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நேரிலும்,அலைபேசி வழியாகவும்,சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்துத் தோழர்களுக்கும்,நண்பர்களுக்கும் மாநில மையத்தின் உளப்பூர்வமான நன்றிகள்*


*🌟மாநிலத் தேர்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாநில மாநாட்டுக்கு இணையாகச்செய்து இயக்க வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட புதுக்கோட்டை மாவட்ட நமது பேரியக்கத் தோழர்களின் இரவு பகல் பாராத பேருழைப்பு வியக்கத்தக்கது.புதுக்கோட்டை நகரெங்கும் இயக்கப்பதாகைகள்,இயக்கத்தின் வண்ணமணிக்கொடிகள் பட்டொளி வீசிய காட்சி,மாநிலம் முழுவதுமிருந்து வருகை புரிந்த தங்களின் சக தோழர்களை வரவேற்றும்,நம் பேரியக்கத்தின் கொள்கைகளையும்,இலட்சியங்களையும்,கோரிக்கைகளையும் தாங்கி நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த வரவேற்புத்தட்டிகள், மிகச்சிறந்த நிகழ்வரங்கம்,அறுசுவை உணவு, உபசரிப்பு என புதுக்கோட்டை மாவட்டத்தோழர்களின் அபரிதமான ஆற்றல்மிகு உழைப்பை மாநில மையம் நன்றியுடன் பாராட்டி மகிழ்கிறது.*


*⚡தோழமையுடன்*

*ச.மயில்**பொதுச்செயலாளர்**தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.

ஞாயிறு, 4 மார்ச், 2018

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12வது மாநிலத் தேர்தல் முடிவுகள்


மாநிலத் தலைவர்
தோழர். மு.மணிமேகலை (திருநெல்வேலி மாவட்டம்)

பொதுச் செயலாளர்
தோழர்.ச.மயில் (தூத்துக்குடி மாவட்டம்)

மாநிலப் பொருளாளர்
தோழர் க.ஜோதிபாபு (திருவண்ணாமலை)

துணை பொதுச் செயலாளர்
த.கணேசன் (திண்டுக்கல்)



STFI  பொதுக்குழு உறுப்பினர்
தோழர். S.மோசஸ் (திண்டுக்கல்)

மாநில துணைத்தலைவர்கள்
1.பெ.அலோசியஸ் துரை ராஜ் (காஞ்சி மாவட்டம்)
2.மலர்விழி(தேனி மாவட்டம்)
3.ஜான் கிறிஸ்து தாஸ்(திருப்பூர் மாவட்டம்)
4.ஜோசப் ரோஸ்(சிவகங்கை மாவட்டம்)
5.தமிழ்செல்வி(புதுக்கோட்டை மாவட்டம்)
6.ரஹிம்(விழுப்புரம் மாவட்டம்)


மாநில செயலாளர்கள்
1.மல்லிகா(விருதுநகர் மாவட்டம்)
2.சித்ரா(
3.ஹேமலதா(கன்னியாகுமரி மாவட்டம்)
4.முருகேசன்(திருநெல்வேலி மாவட்டம்)
5.வின்சென்ட்(ஈரோடு மாவட்டம்)
6.முருகன்(மதுரை மாவட்டம்)


மேற்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்  வாழ்த்துக்கள்

இவண்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருவாடானை வட்டாரம் (கிளை)
இராமநாதபுரம் மாவட்டம்.

TNPTF மாநிலத் தேர்தல் முடிவுகள்.

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 ⚡⚡



*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*




*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல் ஜனநாயக முறையில் சிறப்பாக நடைபெற்றது.*




🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,




*🌟 மாநிலத் தலைவர்:*


தோழர்.மு.மணிமேகலை



*🌟 மாநிலப் பொதுச்செயலாளர்:*


தோழர்.ச.மயில்



*🌟 மாநிலப் பொருளாளர்:*


தோழர்.க.ஜோதிபாபு



*🌟 மாநில துணைப் பொதுச்செயலாளர்:*


தோழர்.த.கணேசன்



*STFI பொதுக்குழு உறுப்பினர்:*

தோழர்.ச.மோசஸ்



*🌟 மாநில துணைத் தலைவர்கள்:*


தோழர்.அ.ரஹும்

தோழர்.பெ.அலோசியஸ் துரைராஜ்

தோழர்.மலர்விழி

தோழர்.ஜான்கிறிஸ்து

தோழர்.ஜோசப் ரோஸ்




*🌟 மாநிலச் செயலாளர்கள்:*


தோழர்.மல்லிகா

தோழர்.சித்ரா

தோழர்.ஹேமலதா

தோழர்.முருகேசன்


தோழர்.வின்சென்ட்

தோழர்.முருகன்



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும்  *_TNPTF அயன்_*  சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐




சனி, 3 மார்ச், 2018

நில அளவுகள் அறிவோம்.

நில அளவுகள் அறிவோம்.

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

உங்கள் நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்....

வியாழன், 1 மார்ச், 2018

10000 வருடத்திற்கு முந்தைய தமிழனின் வரலாறு.

தமிழகம்

1,000 வருடத்துக்கு முந்தைய சீன பானை ஓடுகள்: கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேஸ்வரம்





மாணவர்கள் கண்டெடுத்த கிராமங்களில் கண்டெடுத்த பழம்பொருட்கள்



கணித ஆசிரியர் கு.முனியசாமி தனது மாணவர்களுடன்... ________________________________________



மாணவர்கள் கண்டெடுத்த கிராமங்களில் கண்டெடுத்த பழம்பொருட்கள்



கணித ஆசிரியர் கு.முனியசாமி தனது மாணவர்களுடன்... ________________________________________

Published :  26 Feb 2018  19:20 IST

Updated :  26 Feb 2018  19:20 IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 1,000 ஆண்டுகள் முந்தைய பாசிகள், மணிகள், சீன நாட்டுப் பானை ஓடுகளை கண்டெடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி மாணவர்களுக்கு வரலாற்றுத் தடயங்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே தன் சொந்த ஊரான பேரையூரில் பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார்.

இப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் மு.வினித், க.கவியரசன், சே.யுவராஜ், மு.விஷால், த.அருள்