புதன், 21 பிப்ரவரி, 2018

SPDன் அறிவிப்பு

🌹SPD Review Meeting பற்றிய சுருக்கம்🌹

🌹16. 2. 2018 மீளாய்வுக் கூட்டம் விழுப்புரம் ES பொறியியல் கல்லூரியில் SPD நந்தகுமார் IAS தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. 

🌹கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு JD, இரண்டு Sub Collector, இரண்டு CEOS, DEO, DEEO, DPC, ADPC,DC, AEEOS , Supervisors , BRTES இவர்களுடன் பார்வையிடப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சில பள்ளிகளின் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

🌹கூட்டத்தில் நன்றாகவும் முன்னேற்றம்  இருந்த பள்ளி தலைமையாசிரியருக்கும் சரியாக பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

🌹முன்னேற்றம் இல்லாமலும் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களையும்  அந்த ஒன்றிய AEEOS , SuperVisor ,BRTES விளக்கம் கேட்டு கடுமையான வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

🌹மேலும் மிகவும் திருப்தி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் 17A மற்றும் 17B கொடுக்கப்பட்டு உள்ளது. 

🌹AEEOS , Supervisor மற்றும் BRTS களுக்கு உரிய அதிகாரங்களைக் கூறி பள்ளியை பார்வையிட்டு குறைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் எழுதி வருவதுடன் அடுத்த பார்வையில் முன்னேற்றமும் எழுத வேண்டும் எனக் கூறியதோடு முன்னேற்றம் இல்லாத பள்ளி மீது கவனம் நடவடிக்கை இல்லாத பட்சத்தில் பார்வையிடும் AEEOS மற்றும் BRTES மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்ததுடன் தற்போதே சில பேர் மீது 17 A , B & MEMO கொடுக்கப்பட்டுள்ளது .இவற்றில் AEEOS களுக்கு  மட்டும் 17 A தவிர்ப்பு கொடுத்து MEMO வழங்கப்பட்டுள்ளது.

🌹AEEOS , BRTS பார்வையிடலில் ஒத்துழைப்போ , பள்ளி முன்னேற்றத்திற்கு முயற்சியோ கொடுக்காத தலைமை ஆசிரியர்களா அல்லது தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு நல்காத உதவி ஆசிரியர்கள் பெயர் பள்ளியை உயர் அலுவலருக்கு தெரிவிக்கும்படி SPD அறிவுறுத்தி உள்ளார் .

🌷Sub collector (சார் ஆட்சியர்கள்) இருவரும் தொடக்கப் பள்ளிகள் முதல் அனைத்து வகைப் பள்ளிகளையும் தினமும் பார்வையிடுமாறு SPD கேட்டுக் கொண்டுள்ளார்.

🌹 AEEOS, BRTES இனிவருங்காலங்களில் பார்வையிட வரும் போது அவர்களது பணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டி ( 17 A ,B தவிர்த்து கொள்ள) பள்ளி பார்வையிடலும் பார்வைப் பதிவேடு எழுதுவதும் அறிவுறுத்தலும் அமையும்.

 🌹 ஆசிரியர்கள் அவர்கள் ஆலோசனை களையும் வழிகாட்டுதல்களையும் நட்புணர்வோடு கேட்டு பதிவேடுகள் பராமரித்தும் கற்பித்தல் முறையை மேம்படுத்தி தங்கள் பணியை செவ்வனே செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🌷தொடக்க / நடுநிலைப் பள்ளி யோடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதும் அவர்கள் உடன் பணியாற்றும் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் ஓய்வு பெறப்போகும் நிலையில் கடுமையான பார்வையிடலும் நடவடிக்கையும் கண்டு புலம்புவது நம்மை யோசிக்க வைக்கிறது.

🌹எனவே தங்கள் பள்ளி வளர்ச்சிக்காக மற்றவர்களிடம் சந்தேகமோ ஆலோசனைகளை கேட்க தயங்க வேண்டாம். 

🌹மாணவர்களின் நலனோடு நமது பணிப் பாதுகாப்பு மிக முக்கியம்  என்பதை அனைவரும் உணர்ந்து தலைமையாசிரியரும் உதவி ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து குடும்பம் போன்று செயல்படுமாறு இயக்க உள்ளங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . 

🌹இதை தொகுத்து வெளியிடுவதின் நோக்கம் ஆசிரியர்களை பயமுறுத்துவதற்காக அல்ல இயக்க ஆசிரியர் நலன் கருதி பகிரப்படுகிறது. 

🌹மேலும் கல்வித்துறை நவீனமயமாக்கலுடன் விரைவில் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்த உள்ளதும்  உயர் அலுவலர்கள் கல்வித்துறையை மேம்படுத்த எடுத்துள்ள கடும் முயற்சியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

🌹 அடுத்த வருடம் தொடக்கம் முதலே இது போன்ற பார்வையிடல் நடக்க உள்ளதால்  கடமையை காலத்தோடு செய்து வரும் முன் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக