புதன், 28 பிப்ரவரி, 2018

TNPTF போடி பொன்னையா (முதுபெரும் இயக்கவாதி) அவர்களின் துணைவியார் அவர்கள் இயற்கையெய்தினார்... திருவாடானை ஒன்றியத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்ந்த இரங்கல்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  

*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும்,நமது இயக்கத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவருமாகிய தோழர்.போடி பொன்னையா அவர்களின் துணைவியார் அவர்கள் 26.02.2018 அன்று இயற்கை எய்தினார்*


*🌟நமது இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும்,இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொருளாளருமாகிய தோழர்.தி.கண்ணன்,மாநிலத் தலைவர் தோழர்.ச.மோசஸ் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்*


*🌟நமது இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர்.கே.ஏ.தேவராஜன்,முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ந.பர்வதராஜன்,முன்னாள் மாநில பொருளாளர் தோழர்.நாகப்பன் ஆகியோர் உள்ளிட்ட நமது இயக்கத்தின் தேனி மாவட்டத் தோழர்கள் நேரில் சென்று துயரத்தில் பங்கேற்றனர்*


*🌟அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது*

இவண்

*மாநில மையம்*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*


*_TNPTF அயன்_* *சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*

தேசிய அறிவியல் தினம் ..இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் நம்புதாளை ஊ.ஒ.ஆ.பள்ளி நம்புதாளை.

புதன், 21 பிப்ரவரி, 2018

வெற்றி- TNPTFன் வெற்றி

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் திருமதி. செல்வி ஆசிரியையின் கணவர் ஆண்டோ அவர்களின் தொடர் சிகிச்சைக்காக  ரூ.17000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
-🌹🌹🌹🌹🌹🌹🌹

TNPTFன் NHIS சாதனை வெற்றி

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
விருது நகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரச் செயலாளர் திரு.ஜெகநாதன் அவர்களின் மகன் கோகுலின் தொடர் சிகிச்சைக்காக  ரூ.5900/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
-🌹🌹🌹🌹🌹🌹🌹

SPDன் அறிவிப்பு

🌹SPD Review Meeting பற்றிய சுருக்கம்🌹

🌹16. 2. 2018 மீளாய்வுக் கூட்டம் விழுப்புரம் ES பொறியியல் கல்லூரியில் SPD நந்தகுமார் IAS தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. 

🌹கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு JD, இரண்டு Sub Collector, இரண்டு CEOS, DEO, DEEO, DPC, ADPC,DC, AEEOS , Supervisors , BRTES இவர்களுடன் பார்வையிடப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சில பள்ளிகளின் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

🌹கூட்டத்தில் நன்றாகவும் முன்னேற்றம்  இருந்த பள்ளி தலைமையாசிரியருக்கும் சரியாக பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

🌹முன்னேற்றம் இல்லாமலும் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களையும்  அந்த ஒன்றிய AEEOS , SuperVisor ,BRTES விளக்கம் கேட்டு கடுமையான வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

🌹மேலும் மிகவும் திருப்தி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் 17A மற்றும் 17B கொடுக்கப்பட்டு உள்ளது. 

🌹AEEOS , Supervisor மற்றும் BRTS களுக்கு உரிய அதிகாரங்களைக் கூறி பள்ளியை பார்வையிட்டு குறைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் எழுதி வருவதுடன் அடுத்த பார்வையில் முன்னேற்றமும் எழுத வேண்டும் எனக் கூறியதோடு முன்னேற்றம் இல்லாத பள்ளி மீது கவனம் நடவடிக்கை இல்லாத பட்சத்தில் பார்வையிடும் AEEOS மற்றும் BRTES மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்ததுடன் தற்போதே சில பேர் மீது 17 A , B & MEMO கொடுக்கப்பட்டுள்ளது .இவற்றில் AEEOS களுக்கு  மட்டும் 17 A தவிர்ப்பு கொடுத்து MEMO வழங்கப்பட்டுள்ளது.

🌹AEEOS , BRTS பார்வையிடலில் ஒத்துழைப்போ , பள்ளி முன்னேற்றத்திற்கு முயற்சியோ கொடுக்காத தலைமை ஆசிரியர்களா அல்லது தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு நல்காத உதவி ஆசிரியர்கள் பெயர் பள்ளியை உயர் அலுவலருக்கு தெரிவிக்கும்படி SPD அறிவுறுத்தி உள்ளார் .

🌷Sub collector (சார் ஆட்சியர்கள்) இருவரும் தொடக்கப் பள்ளிகள் முதல் அனைத்து வகைப் பள்ளிகளையும் தினமும் பார்வையிடுமாறு SPD கேட்டுக் கொண்டுள்ளார்.

🌹 AEEOS, BRTES இனிவருங்காலங்களில் பார்வையிட வரும் போது அவர்களது பணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டி ( 17 A ,B தவிர்த்து கொள்ள) பள்ளி பார்வையிடலும் பார்வைப் பதிவேடு எழுதுவதும் அறிவுறுத்தலும் அமையும்.

 🌹 ஆசிரியர்கள் அவர்கள் ஆலோசனை களையும் வழிகாட்டுதல்களையும் நட்புணர்வோடு கேட்டு பதிவேடுகள் பராமரித்தும் கற்பித்தல் முறையை மேம்படுத்தி தங்கள் பணியை செவ்வனே செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🌷தொடக்க / நடுநிலைப் பள்ளி யோடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதும் அவர்கள் உடன் பணியாற்றும் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் ஓய்வு பெறப்போகும் நிலையில் கடுமையான பார்வையிடலும் நடவடிக்கையும் கண்டு புலம்புவது நம்மை யோசிக்க வைக்கிறது.

🌹எனவே தங்கள் பள்ளி வளர்ச்சிக்காக மற்றவர்களிடம் சந்தேகமோ ஆலோசனைகளை கேட்க தயங்க வேண்டாம். 

🌹மாணவர்களின் நலனோடு நமது பணிப் பாதுகாப்பு மிக முக்கியம்  என்பதை அனைவரும் உணர்ந்து தலைமையாசிரியரும் உதவி ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து குடும்பம் போன்று செயல்படுமாறு இயக்க உள்ளங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . 

🌹இதை தொகுத்து வெளியிடுவதின் நோக்கம் ஆசிரியர்களை பயமுறுத்துவதற்காக அல்ல இயக்க ஆசிரியர் நலன் கருதி பகிரப்படுகிறது. 

🌹மேலும் கல்வித்துறை நவீனமயமாக்கலுடன் விரைவில் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்த உள்ளதும்  உயர் அலுவலர்கள் கல்வித்துறையை மேம்படுத்த எடுத்துள்ள கடும் முயற்சியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

🌹 அடுத்த வருடம் தொடக்கம் முதலே இது போன்ற பார்வையிடல் நடக்க உள்ளதால்  கடமையை காலத்தோடு செய்து வரும் முன் காப்போம்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

போதையனார் தேற்றம்... பிதாகரஸ் தேற்றம்

இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.

கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.

இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.
"ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.

இரத்தினம் தாத்தா: 
"இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"

இரத்தினம் தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்

விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். 

இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. 

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.

அமிர்தா: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
--------------------------------
இது வெறும் கதை அல்ல.
நிரூபணம்:
நீளம் = 4m, உயரம் = 3m.
எனில் கர்ணம்,
பிதாகரஸ் தேற்றம்:
கர்ணம் = √(4^2 + 3^2) = 5

போதையனார் கோட்பாடு:
கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 😍😍😍

தமிழன்டா என்நாளும்!!

ஜாக்டோ ஜியோவின் நாளைய தொடர் மறியலில் முதல் வெற்றி.

*-👍👍FLASH NEWS:- நாளை முதல் நடைபெறும் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தின் முதல் வெற்றி!!*

*அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய "ONE MAN COMMISSION" அமைத்ததது தமிழக அரசு - G.O.Ms.57 அரசாணை வெளியீடு.

🅱💢 *_FLASH NEWS : G.O Ms : 57 - அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய "ONE MAN COMMISSION" அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு_* › Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு... இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்..

Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு... இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்... 👇👇👇

EMISH தற்போதய தகவல்கள்.

*EMIS தகவல்கள்:*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟





🌟 23.2.18க்குப் பிறகு எந்த வகுப்பிற்கும் New entry செய்ய முடியாது என்பதால் அதற்குள், New entry செய்யவேண்டியிருப்பின் பதிவேற்றத்தினைமுடித்திடுதல் வேண்டும்.


🌟 UDISE ல் உள்ள மாணவர்கள் பதிவிற்கும், தங்களது பள்ளியில் தற்பொழுது பயிலும் மாணவர்கள் பதிவிற்கும் வேறுபாடு காணப்படுகிறது என்பதால் EMIS ல் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பதிவினை பதிவிடுவதற்கு Option நாளைக்குள் வர இருக்கிறது வந்தவுடன் தங்களது EMIS தளத்திற்குள் சென்று மாணவர் பதிவினை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🌟 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் பதிவேற்றம் செய்து முடித்த பின் புகைப்படம், குருதி வகை, ஆதார் எண் ஆகிய தகவல்களை மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.


🌟 பதிவு செய்தவுடன் Data Approval கொடுக்க வேண்டும்.


🌟 Data Approval முடித்த பின்பு ID Approval க்கு சென்று மாணவர் விபரங்களை சரிபார்த்து விட்டு ID Approval கொடுக்க வேண்டும்.


🌟 ஆதார் இல்லாத மாணவர்களுக்கு BRC ல் ஆதார் மையம் அமைக்க இருப்பதால் கீழ் கண்ட  படிவத்தினை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும்.


🌟 மேலும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழி படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு தர வேண்டி இருப்பதால் பணியினை மிகச் சரியாக விரைந்து முடிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


🌟 அனைத்து பணிகளையும் இந்த வாரத்திற்குள் முடிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



🌟 மேற்கண்ட படிவங்கள் கீழே உள்ள link ல் இணைக்கப்பட்டுள்ளது, Link ஐ கிளிக் செய்து படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 


திங்கள், 19 பிப்ரவரி, 2018

குழந்தைகளைக் காப்போம்!

நாளை 19.02.2018 முதல் 24.02.2018 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் உயிர்ச்சத்து A திரவம் வழங்கப்படுகிறது.. 

6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள உங்கள் குழந்தைகளுக்கு​ 6 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் வைட்டமின் ஏ திரவம் வழங்கிடுங்கள்... 
வருங்கால சந்ததியை பார்வை இழப்பிலிருந்து காத்திடுங்கள்...

மறவாதீர்...மாதங்கள் 
...ஆறிலிருந்து அறுபது வரை... 
...ஆறு மாதத்திற்கு ஒருமுறை...

உங்கள் குழந்தைகளுக்கு
...உயிர்ச்சத்து A திரவம் வழங்குங்கள்... 
பார்வை இழப்பை தடுத்திடுங்கள்...!

          - பொது சுகாதாரம் மற்றும்    
            நோய் தடுப்பு மருந்து துறை.

சமூக அக்கறையுடன்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
மேலூர் வட்டாரம் (கிளை),
மதுரை மாவட்டம்.

சனி, 10 பிப்ரவரி, 2018

DA News

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது....

புதன், 7 பிப்ரவரி, 2018

உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்பட்டதா?

ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது.

அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.



இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

1) முதலில் ' https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.

2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.


3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில்  Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)


7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும். 

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சரிந்த குடலும் தொலைந்த நம்பிக்கையும்.

*சரிந்த குடலும் தொலைந்த நம்பிக்கையும்*

அறிவுப்பிதாக்களே ஆழ்ந்த இரங்கல்கள்
மாதா பிதாவானவர்களே
எதிர்காலத்தின் நம்பிக்கை ஏணிகளே
பள்ளி குருக்களே
நிறைய வருத்தங்கள்

சிலேட்டு தொடங்கி செயலிவரை உங்கள் கல்விப் பிரமாதம்
பெரிய மலைப்பு
எவ்வளவு புதுமைகள் எத்தனை திட்டமிடல்கள் எத்தனை மாற்றங்கள்
சமச்சீர் முறை
வண்ண அட்டை
இன்னபிற எண்ணிலடங்கா முறை

பெருங்கல்வியாளர்களின் பெருத்த சிந்தனைகள்
அடிக்கடி பயிற்சிகள் அளவில்லா மதிப்பீடுகள் விரட்டும் அதிகாரிகள் மாநில ஆய்வுகள்
எத்தனை வேகம் எவ்வளவு துல்லியம்
அட டா 
சிலிர்க்கிறது நினைக்க நினைக்க செம்மாந்த உங்கள்துறை வளர்ச்சி

ஓடி ஓடி மாணவன் வீடுதேடி கைபிடித்து கெஞ்சி அன்பாலே கொஞ்சி தம்சுயதகுதியை மிஞ்சி எத்தனையோ செய்தும் எழவில்லையே நம்பிக்கை சமுதாயம்???

மேதகு கல்விப்புலிகளே
முதலில் புள்ளிவிவரங்களை தூக்கி வீசுங்கள் 
வந்து பள்ளி நிலவரங்களை அலசுங்கள்
உங்கள் சந்தேக கண்களை அறிவால் முதலில் கழுவுங்கள்

ஒவ்வோர் ஆசிரியனும் படும்துயர் உணருங்கள்
ஊருக்கு இளைத்தவனாகி எவன் வேணுமாலும் அதட்டி மிரட்டும் குருமார்களின் துயர்களை
முதலில் மனங்கொண்டு உணருங்கள்

மாணவன் மனம்நோக நடவாதீர் என எங்களுக்கு வகுப்பெடுக்குற அதிபுத்திசாலிகளே
எங்களின் மனக்குமுறல்கள் உங்கள் மனங்கீறவில்லையா?

இதோ
என் சொந்தம் குத்துப்பட்டு மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது
இதற்கும் சப்பைக்கட்டு கட்டி ஆசிரியர்கள் மீதே மீண்டும் சேற்றைப் பூசிடாதீர்

முதலில் உங்கள் அறிவுக்கூர்மையை சுயபரிசோதனை செய்யுங்கள்
மனிதமற்று நிற்கிற மழலைகளுக்கு இக்காலத் தேவை எதென்பதை தீர்க்கமாய் தீர்மானியுங்கள்

பாதுகாப்புச்சட்டம் கூட நாங்கள் போராடி நீங்கள் போடப்போகிற பிச்சையாய் இல்லாமல் 
விரைந்து முடிவெடுங்கள்

சொல்லிக்கொடுக்கும் எங்களுக்கே சொல்லிக்கொடுப்பதை மூட்டைக் கட்டி விட்டு 
மனிதம் சார்ந்த கல்வியை முன்னெடுங்கள்

வகுப்பறை சுதந்திரமாய் செயல்பட விரும்பும் நீங்கள் தான் குருக்களின் கைகளில் விலங்கிட்டே வைத்திருக்கிறீர்கள்

இது
எங்கள் ஒட்டுமொத்த மௌனத்தின் முதல்குரல்

எங்கள் உறவு சிந்திய ரத்தம் உலர்வதற்குள்ளாவது 
உணருங்கள்
எழுத்தறிவித்தவன் இறைவனென்று..
அவனுக்குப் படையலிடுதலே வழக்கம்
அவனையே பலியிடுதலா இக்கால வழக்கம்??
தெளியட்டும் குழப்பம்.
2020க்கு ஈராண்டுகளே மிச்சமிருக்கிறது
ஆசானின் அவசியமுணருங்கள்
நாளை  முதலேனும் நற்பூக்கள்  பூக்க புதுவிதி எழுதுங்கள்..

ஆறா வருத்தங்களுடன்,
*சீனி.தனஞ்செழியன்*

TNPTF - க்கு அடுத்த வெற்றி

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கண் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகை் ரூ.19, 700/-யையும் பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.

சாதனை - TNPTF - க்கு அடுத்த வெற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம் தேவனாங்குறிச்சி ஊ.ஒ. ஆரம்பப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் திருமதி. ஜெயா என்பாரின் மகன் கவின்குமார் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகையும் ரூ.1,17,135/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.

சகாயம் ஐ.ஏ.எஸ் வாழ்க்கை.

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...
=================================================
பெயர்:
உ.சகாயம்

பிறப்பு:
பெருஞ்சுணை கிராமம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉

பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.
 
அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗
   அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗

தொழில்:
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்

மிகவும் பிடித்த வாசகம்:

✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
✅உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:
1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

நீண்டகால சாதனை:
👎23 ஆண்டுகளில் 24 முறை இடம் மாற்றம் மற்றும் பணி மாற்றம்..

👌கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.

👌மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.

👌சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்

 மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼

  சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼
  
 பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼
   
   கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼

நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼

✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

✅✅✅உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.

எதிரிகள்:
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.

சமீபத்து எதிரிகள்:
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.

ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்:
நேர்மை

பலவீனம்:
❎❎ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.

லட்சியம்:
🎯ஊழல் இல்லா இந்தியா

🎯கிராமப்புற ஏழைகளுக்காக
அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.

இதுவரை அறிந்த உண்மைகள்:
நேர்மை நிச்சயம் வெல்லும்,
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.👍👍👍

இதுவரை புரியாதது:
அடுத்த பதவியும் இடமும்

விரும்புவது:
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗

விரும்பாதது:
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை❓

நண்பர்களே..!

நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.

சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,
நம் குழந்தைகளுக்கு
முன்மாதிரியாக அறியத்தருவோம்.

ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.
👍👍👍👍👍👍

எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Share செய்கிறோம் 

இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை 
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான் 

சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை 

நன்றி

தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல் -தலைமை ஆசிரியர் கவலைக்கிடம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இராமகிருஷ்ண மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுவை மீது பதினோறாம் வகுப்பு மாணவன் ஹரிகரன்உட்பட 5மாணவர்கள் கத்தியால் தாக்குதல் 

 ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

தப்பி சென்ற மாணவனை திருப்பத்தூர் நகர போலிசார் தேடி வருகின்றனர்.

பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனிமேல் ஊக்கத்தொகை என்று ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களை நியமிக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

TNPTF-மேலூர்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : வ...

TNPTF-மேலூர்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : வ...: அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது. தமிழக...

TNPTF-மேலூர்: அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்...

TNPTF-மேலூர்: அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்...: தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன....

TNPTF-மேலூர்: தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி!

TNPTF-மேலூர்: தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி!: சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பொது அறிவு திருவிழாவில் தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளிமாணவி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியும், நெக...

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

TNPTFன் சமரசமற்ற போர்க்குணத்திற்கு கிடைத்த வெற்றி மகுடம்

👍👍👍 வெற்றி👍👍👍
👍👍👍 சாதனை👍👍👍

NHIS திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி வந்த மிகவும் பெயர்பெற்ற மதுரை மருத்துவமனைக்கு 3.5 கோடி ரூபாய் நிறுத்தம். புகார்களை தீர்வு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தடையில்லா சான்று பெற்று வர ஆணை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எடுத்த முயற்சிக்கு அடுத்த வெற்றி. 
 NHIS திட்டத்தில் ஏற்படும் அநீதிகளை வெளிக்கொணர்வோம். 
ஆசிரியர்கள் நலன் காப்போம்.


_ TNPTF மாநில மையம்

TNPTF ன் சாதனை வெற்றி

👍👍👍 வெற்றி👍👍👍
👍👍👍 சாதனை 👍👍👍

அன்பார்ந்த ஆசிரியர் பேரினமே''
NHIS - மூலம் கட்டணமில்லா சிகிச்சையை கார்ப்ரேட் மருத்துவமனைகள் காசாக்கி ஆசிரியர் - அரசு ஊழியர்களின் உயிரினை பணயமாக வைத்து மிரட்டி முன் பணம் என்ற பெயரில் வசூல் செய்வதை ஆதாரத்துடன் நிரூபித்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை இன்று UNITED INDIA இன்சூரன்ஸ் நிறுவனத்தால்  தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருகின்றது.

இதற்கு முன் மதுரை வடமலையான் மருத்துவ மனையும் மூன்று மாதங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது TNPTF மாநில மையத்தின் மகத்தான சாதனை.

தவறு எந்த இடத்தில் நடந்தாலும் துணிவோடு தட்டிக் கேட்பது TNPTF மட்டுமே.

- TNPTF மாநில மையம்

ரூ.40,000 நிலையான கழிவு கொடுப்பதை போல கொடுத்து வேறு வழியில்பறித்த அரசு.. மாத சம்பளதாரர்கள் ஷாக்!

                   மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆம். நிரந்தர கழிவு என்ற பெயரில் ரூ.40,000 அறிவித்துவிட்டு, நைசாக மெடிக்கல் செலவு மற்றும் பயணப்படி (conveyance) ஆகியவற்றை நீக்கிவிட்டது மத்திய அரசு.



                    இதனால் மிக, மிக சொற்பமான தொகை மட்டுமே மாத சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு எஞ்சப்போகிறது. சலுகை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு, ஏற்கனவே இருந்த சலுகையை பறித்துவிட்டது மத்திய அரசு.2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்தியநிதி அமைச்சர் அருண் ஜேட்லி.அப்போது வருமான வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் நிலையான கழிவு (standard deduction) என்ற பெயரில் ரூ.40,000 அறிவிக்கப்பட்டது.2006-07ம் நிதியாண்டுக்கு முன்புவரை நிலையான கழிவு என்பது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். அதிகபட்சமாக அப்போது ரூ.30,000 வரை நிலையான கழிவு அனுமதிக்கப்பட்டது. எனவே இதே நடைமுறை மீண்டும் வந்துள்ளதாகவே மக்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். மாத சம்பளதாரர்களுக்கு கிடைத்த ஒரே நல்ல அறிவிப்பு இதுதான் என நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டனர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.நிலையான கழிவாக ரூ.40,000 அளிப்பதாகவும், அதற்குமெடிக்கல் பில் மற்றும் பயணப்படி சான்றுகளை கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஜேட்லி கூறியிருந்தார். ஆனால் ஏற்கனவே இருந்த அவ்விரு சலுகைகளும் பறிக்கப்பட்டுவிட்டது இப்போது தெரியவந்துள்ளது.

கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு

                வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

                   இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

01/02/18 இல் Play store இல் வெளியான EMIS app update பிரச்சனைக்கான தீர்வு



EMIS New Update 2 February  இல் உங்களுடைய மாணவர்கள் போட்டோ ஏற்கனவே எடுத்து போனில்  save செய்யப்பட்டதை தற்போது பதிவேற்றம் செய்யும் போது இதற்கு முன் view வில் போட்டோ தெரியாது தற்போது தெரிகிறதுஎனவே பள்ளி வேலை நேரத்தில் emis app work ஆகவில்லை எனில் கவலை வேண்டாம் நீங்கள் மாணவர்களைதனித்தனி யாக போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் பதிவேற்றலாம் 01/02/18 இல் Play storeஇல் வெளியான EMIS app update பிரச்சனைக்கானதீர்வு:

Teacher's Forms - New Forms

இராமநாதபுரம் மாவட்டம்- தொண்டியின் சிறப்பு.

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசுநிதியுதவி அளிக்கிறது. 
 
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட செய்தித் துளிகள்

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (03.02.2018) சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலக கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.



சனி, 3 பிப்ரவரி, 2018

PEDAGOGY METHOD - தொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை,படிநிலைகள் மற்றும் logo

INCOME TAX FORM 2018 - ALL DETAILS & INCOME TAX CALCULATORS


2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

பட்ஜெட் 2018 -19: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* சம்பளதாரர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.
* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.
* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000  வரை விலக்கு பெறலாம்
* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்
* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்
* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்

பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வாங்குதல் குறித்த செயல்முறைக் கடிதம்

திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

EMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்

கனவு ஆசிரியர் விருதுக்கான அறிவிப்பு... இயக்குனர்

Emish report all District as on 02.02.18

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

NHIS திட்டத்தில் தொடரும் குளறுபடியும், மருத்துவமனைகளின் பித்தலாட்டமும் எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரம் TNPTF வட்டாரத் தலைவர் திரு.பிரிட்டோ அவர்கள் கடந்த 23.1.2018 அன்று எலும்பு முறிவிற்காக மதுரையில் புகழ் வாய்ந்த மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் குமரேசன் அவர்கள் உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். தனக்கு NHIS திட்டத்தில் சிகிச்சையளிக்க கோரியபொழுது முன் பணம் கட்ட வற்புறுத்திய மருத்துமனை நிர்வாகம் 50 ஆயிரம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது. வேற வழியில்லாமல் தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தோழர் செலுத்தியுள்ளார். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு 23.1.2018 அன்று 32ஆயிரம் ரூபாய்தான் அனுமதித்துள்ளது, மேலும் சிகிச்சையளிக்க வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என  மருத்துமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக 31.1.2018 அன்று மருத்துமனை நிர்வாகம் எழுத்து பூர்வமான கடிதம் கோரியுள்ளது. 

 இது குறித்து மாவட்ட மையத்தை தோழர் பிரிட்டோ தொடர்பு கொண்டபொழுது நாம் இத்திட்டத்தினால் எழும் பிரச்சனைகளுக்காக மாநில மையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகனேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 

இது குறித்து விரிவாக ஆலோசிக்க திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் மருத்துமனைக்கே நேரடியாக சென்று பிரிட்டோ அவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அனுமதித்த தொகை சரிதானா என தகவல் சேகரித்தபொழுது 26.1.2018 அன்றே மருத்துமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டதாக பதிவு இருந்ததை கண்ட தோழர் பிரிட்டோ அதிர்ச்சிக்குள்ளானார். 26.1.2018 அன்று விடுவிப்பு செய்ததாக பதிவேற்றிவிட்டு 31.1.2018 அன்று சொந்த விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சை பெறுவதாக கடிதம் கோரிய மருத்துவமனையின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தோழர் பிரிட்டோ மாவட்ட மையம் மற்றும் தோழர் செல்வகனேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி தற்பொழுது மதுரை மாவட்ட சுகாதரத்துறை இணை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துமனையின் உள்நோக்கம் குறித்தும், தனக்கு முழுமையான பணத்தை விடுவிப்பு செய்வதோடு ஏற்கனவே மருத்துமனையில் செலுத்திய 20 ஆயிரத்தையும் மீட்டு தரவேண்டும் என மனு அளித்துள்ளார். மேலும் முழு தொகை விடுவிப்பு செய்யும் வரை மருத்துமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவும் முடிவாற்றப்பட்டுள்ளது. 

மேற்கண்ட உரிமை மீட்பில் தொடர்ந்து உதவி வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் திரு.செல்வகனேஷ் அவர்களுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கிளை நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

'பாதகம் செய்பவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல நாங்கள்
'நெஞ்சினை பிறந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்' என்ற வரிகளை நெஞ்சில் தாங்கும் சமரசமற்ற போராளி இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அக்னி குஞ்சுகள் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.



தொடர்ந்து இயக்க பணியில்
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.

எம் பள்ளியில்  பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.

வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை.

அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை
சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS

அதே போல் இவ்வாண்டு  கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

-------------------------------------------------------------------------------------
என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
உதுமான்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342
-------------------------------------------------------------------------------------------