புதன், 16 மே, 2018

+2 result

*HSC RESULT 2018*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  


*HSC RESULT 2018 மாவட்ட  வாரியாக தேர்ச்சி சதவீதம்*

⚡1) விருதுநகர் 97.05%
⚡2) ஈரோடு 96.35%
⚡3)திருப்பூர் 96.18%
⚡4) இராமநாதபுரம் 95.88%
⚡5) நாமக்கல் 95.72%
⚡6) சிவகங்கை 95.60%
⚡7) தூத்துக்குடி 95.52%
⚡8) கோயம்புத்தூர் 95.48%
⚡9) தேனி 95.41%
⚡10)திருநெல்வேலி 95.15%
⚡11)கன்னியா குமரி 95.08%
⚡12) பெரம்பலூர் 94.10%
⚡13)கரூர் 93.85%
⚡14) சென்னை 93.09%
⚡15)திருச்சி 92.90%
⚡16) தரும்புரி 92.79%
⚡17) மதுரை 92.46 %
⚡18)சேலம் 91.52%
⚡19)ஊட்டி 90.66%
⚡20) தஞ்சாவூர் 90.25%
⚡21) திண்டுக்கல் 89.78%
⚡22)புதுக்கோட்டை 88.53%
⚡23) திருவண்ணாமலை 87.97%
⚡24)காஞ்சீபுரம் 87.21%
⚡25)திருவள்ளூர் 87.17%
⚡26) கிருஷ்ணகிரி 87.13%
⚡27)வேலூர் 87.06 %
⚡28) கடலூர் 86.69%
⚡29) நாகப்பட்டினம் 85.97%
⚡30) திருவாரூர் 85.45%
⚡31) அரியலூர் 85.38%
⚡32) விழுப்புரம் 83.35%


டிஎன்பிடிஎப் ஒரு நபர் குழுவிடம் அறிக்கை

*ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக ஒரு நபர் குழுவிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளித்த மனு விபரம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡






பெறுநர்
மதிப்புமிகு.எம்.ஏ.சித்திக், ஐ.ஏ.எஸ் அவர்கள்,
அரசு செயலாளர்(செலவினம்) மற்றும்      தலைவர் ஒரு நபர் குழு,
நிதித்துறை தலைமைச் செயலகம்,
சென்னை - 9.



மதிப்புமிகு ஐயா;
பொருள் :  ஊதிய முரண்பாடுகளைக்           களைவதற்கான ஒரு நபர் குழு - மத்திய அரசின் 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் மற்றும் இதர வகை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புகளைக் களைய தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுதல் சார்பு


பார்வை: 

1.அரசாணை எண் : 57 நிதி(ஊதியப்பிரிவு)துறை நாள் 19.02.2018

2.அரசாணை எண் : 303 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் 11.10.2017

3.அரசாணை எண் : 234 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் 01.06.2009




*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழகத்தில் 30 மாவட்டக்கிளைகளையும் 400க்கும் மேற்பட்ட வட்டாரää நகரக் கிளைகளையும் 50000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட அமைப்பாகும்.  தொடக்கக் கல்வி நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளிகள் அரசுப் பள்ளிகள் நிதி உதவிபெறம் பள்ளிகள் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் கள்ளர் சீரமைப்புத்துறைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பாகும்.  தமிழகத்தில் ஆசிரியர் நலன் மாணவர் நலன் கல்வி நலன் தேச நலன் சார்ந்து செயலாற்றி வரும் முதல் பெரும் ஆசிரியர் இயக்கமாகும்.*



*🌟தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு எமது இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் வீரஞ்செறிந்த தொடர்ச்சியான 44 ஆண்டு கால போராட்டங்களின் விளைவாக 1.6.88 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.  அதன்படி 1.6.88 முதல் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஊதிய விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.*




சாதாரண நிலை - 1200 - 30 - 1560 - 40 - 2040
தேர்வு நிலை - 1400 - 50 - 2300 - 60 - 2600
சிறப்பு நிலை - 1640 - 60 - 2600 - 75 - 2900



*🌟மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவில் ஆசிரியர்களுக்கென தனி ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்த எங்கள் இயக்கம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.  அதனடிப்படையில் மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவரான நீதியரசர் திருமிகு. ரத்தினவேல்பாண்டியன் அவர்கள் தலைமையிலான 5 வது ஊதியக்குழுவிற்கு ஆசிரியர்களுக்கென தனி ஊதியவிகிதம் ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.*



*🌟அதன்படி தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.96 முதல் கீழ்க்கண்டவாறு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.*


சாதாரண நிலை - 4500 - 125 - 7000
தேர்வு நிலை - 5300 - 150 - 8300
சிறப்பு நிலை - 5900 - 200 - 9900



*🌟ஆசிரியர் பணிக்குத் திறமையானவர்களை ஈர்த்துக் கொள்ளவும் அப்பணியில் ஆசிரியர்களைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு விரும்பியது.  அதனடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களையும் தரநிலை ஊதியங்களையும் கீழ்க்கண்டவாறு மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது.*


        சாதாரண நிலை - (Pடீ2) 9300 - 34800 - 4200
தேர்வு நிலை - (Pடீ2) 9300 - 34800 - 4600
சிறப்பு நிலை - (Pடீ2) 9300 - 34800 - 4800



*🌟ஆனால் தமிழக அரசோ மேற்கண்டவாறு இல்லாமல் 01.01.2006 முதல் தமிழக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை (Pடீ1) 5200 - 20200 - 2800 என்று நிர்ணயித்து முற்றிலும் மத்திய அரசின் ஊதியக்குழுவின் நடைமுறைக்கு மாறாக நடைமுறைப்படுத்தியது.*



*🌟ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் பட்டதாரி ஆசிரியர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோரின் ஊதிய விகிதக் குறைபாடுகள் தர ஊதிய முரண்பாடுகள் போராட்டங்களின் விளைவாக ஓரளவு சரி செய்யப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியமாக ரூ 750 மட்டும் அனுமதிக்கப்பட்டது.  ஆனால் இடைநிலை ஆசிரியர்களின் பெரும் ஊதிய இழப்பு இன்றுவரை சரிசெய்யப்படவில்லை.*



*🌟ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகள் தொடர்பான குறைகள் தீர்க்கப்பட தமிழக அரசால் ஒரு நபர்குழு அமைக்கப்பட்டது.  அக்குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கையின் மீது சரியான தீர்வு காணாமல் நியாயமற்ற காரணங்களைக் கூறி தட்டிக் கழித்துவிட்டது.*



*🌟அக்குழுவின் அறிக்கையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாக்களில் மிகக்குறைவான இடைநிலை ஆசிரியர்களே பணியாற்றுவதாகவும் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுவதால் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய ((Pடீ2) 9300 - 34800 10 4200 வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.*



*🌟ஒரு நபர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட மேற்கண்ட கருத்து "சமவேலைக்குச் சம ஊதியம்" என்ற கோட்பாட்டிற்கு முரணானது.  கேந்திரிய வித்யாலயாக்களைக் சுட்டிக்காட்டும் ஒரு நபர்குழு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு (Pடீ2) 9300 - 34800 10 4200 வழங்குவதை வசதியாக மறந்து விட்டது.*



*🌟மேலும் ஒரு நபர்குழு தன்னுடைய அறிக்கையில் "இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழ்வதால் அவர்களின் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு.  எனவே அவர்களுக்கு நகரங்களில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல (Pடீ2) 9300 - 34800 10 4200 என்ற ஊதிய விகிதம் வழங்க இயலாது" என்று கூறியது முற்றிலும் நியாயமற்றது.*



*🌟எந்த கிராமத்திலும் எந்தப் பொருளும் விலை குறைவாகக் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். கிராமப்புற ஆசிரியர்களுக்கும் நகர்ப்புற ஆசிரியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க இயலாது என்று கூறுவது "சமவேலைக்குச் சம ஊதியம்" என்ற உயர்ந்த கோட்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகும்.*



*🌟மேலும் ஒரு நபர் ஊதியக்குழு ஆணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பு 2ல் உள்ள ஊதியவிகிதமான (Pடீ2) 9300 - 34800 10 4200 அனுமதித்தால் முந்தைய ஊதியக்குழுக்களில் ஊதிய விகிதங்களில் சமநிலையில் இருந்த பிறவகைப் பணியாளர்கள் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசம் மேலும் கூடுதலாகி ஊதிய முரண்பாடு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.*



*🌟1.1.1986-ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு 1200 - 30 - 2040 என்ற ஊதிய விகிதம் நிர்ணயம் செய்தபோது இடைநிலை ஆசிரியர்களின் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி என்பது தொழில்நுட்பத்தகுதி என்ற அடிப்படையில் 1.1.1996-ல் மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500 - 125 - 7000 என்ற ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தது.  1.1.2006-ல் (Pடீ2)9300 - 34800 10 4200 என நிர்ணயம் செய்தது.*



*🌟இந்நிலையில் முன்பொரு காலத்தில் சமநிலையில் இருந்த ஊதிய விகிதத்தைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தில் பிளவை ஏற்படுத்த எடுத்த முயற்சியைக் கைவிட்டு மத்திய அரசின் ஊதிய விகிதத்தை தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டுகிறோம். எனவே மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு தன்னுடைய அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்து வழங்கியதன் அடிப்படையில் ஏழாவது ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்துள்ளதைக் கருத்தில் கொண்டு தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டுகிறோம்.*



*இடைநிலை ஆசிரியர் ஊதிய நிர்ணயம்:*


*🌟மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு (Pடீ2) 9300 - 34800 - 4200  என்ற ஊதிய விகிதத்தின்படி 9300 - 4200, 13500 x 2.57 என்ற அடிப்படையில் 11ன்படி 01.01.2016-ல் ரூ35400 ஆக ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்திய அரசாணை எண் 303 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் 11.10.2017-ன்படி (Pடீ1)  5200 - 20200 10 2800 என்ற அடிப்படையில் 5200 - 2800,  8000 x 2.57 என்ற கணக்கீட்டில் ரூ20600 என குறைவாக ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்டவாறு இரண்டுவகையான ஊதிய நிர்ணயத்திற்கும் அடிப்படை ஊதியத்தில் உள்ள வேறுபாடு ரூ-14800 ஆகும்.*



*🌟தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2016 முதல் (Pடீ2) 9300 - 34800 10 4200 என்ற ஊதிய விகிதத்தில் கருத்தியல் ரீதியாக ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.  1.1.2006க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த ஊதிய நிர்ணயத்திற்கு நிகராக ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்படவேண்டும்.  01.06.2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஊதிய இழப்பு சரி செய்யப்பட வேண்டும்.*



*🌟அரசாணை எண் : 234 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் : 01.06.2009 ன் படி 6-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய நிர்ணயம் மற்றும் ஊதிய இழப்புப்பட்டியல்*



1.6.2009
(Pடீ-1) 5200-20200102800 

1.6.2009
(Pடீ-2) 9300-34800-4200

1.1.2006 
(4500-2250-1620)
8370-2800
11170 9300-104200
13500 

1.1.2007 
11170
11510 13500
13910
1.1.2008 
11510
11860 13910
14330 

1.1.2009 
11860
12220 14330
14760     

1.6.2009 
5200-2800
8000 9300-104200
13500

1.1.2010
12220    
12590 14760
15210 

1.4.2010 
8000
8240 135003
13910

1.1.2011 
12590 - 750PP
13340
13340
13740 15210
15670 

1.4.2011
8240 - 750
8990
9260 13910
14330

1.1.2012 
13740
14160 15670
16140 

1.4.2012
9260
9540 14330
14760

1.1.2013 
14590 16140
16630 

1.4.2013 
9540
9830 14760
15210

1.1.2014 
14590
15030
16630
17130

1.4.2014 9830
10130 
15210
15670

1.1.2015 
15030
15480 17130
17650     

1.4.2015 
10130
10440 15670
16140




*🌟மேற்கண்ட நான்கு வகையான ஊதிய நிர்ணய அட்டவணைகள் 1.1.2006 முதல் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள பெரும் ஊதிய இழப்பைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.*


*1)மேற்கண்ட அட்டவணையில் வுயடிடந 1 ன் படி தமிழகத்தில் 1.1.2006 ல் பழைய ஊதிய விகிதமான  4500 - 125-7000ல் நியமனம் பெற்ற ஒரு இடைநிலை ஆசிரியருக்கு 450010- 2250 10 னுயு-1620 - 8370(Pயல in வாந Pயலடீயனெ) என்ற கணக்கீட்டில் 1.1.2006 ல் (Pடீ1).5200-20200102800 ன் படி 8370-2800-11170-750புP சுநஎளைநன  pயல ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1.1.2015ல் (Pடீ 1) -5200-20200-102800 ன் படி அடிப்படை ஊதியம் ரூ.15480 மட்டுமே உள்ளது.*  


*2)வுயடிடந - 2 ன் படி மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதியக் கட்டு ;(Pடீ2) 9300-34800-104200 ன் படி 1.1.2006ல் 9300-104200-13500 என நிர்ணயம் செய்திருக்க வேண்டும். அதன்படி வுயுடீடுநு 2-ன்படி 1.1.2015ல் அடிப்படை ஊதியம் (Pடீ2) 9300-34800-104200 ல் ரூ17650 என நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.*


*3) வுயடிடந 3 ன் படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மத்திய அரசின் ஊதிய விகிதங்களுக்கு முரணாக (Pடீ2) 9300-34800-104200 க்கு பதிலாக (Pடீ1) 5200-20200-102800 என நிர்ணயம் செய்ததால் 1.6.2009ல் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்; 1.6.2009ல் அடிப்படை ஊதியம் ரூ8000 மற்றும் அதன் தொடர்ச்சியாக 1.1.2015ல் ரூ10440 என ஊதியம் பெற்று வருகிறார்கள்.*


*4) வுயடிடந 4 ன் படி தமிழக இடநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் (Pடீ2) 9300-34800-104200 ன்படி 1.6.2009 ல் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் 1.6.2009ல் 9300-4200-13500 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு 1.1.2015ல் ரூ16140 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.*


*5) 6 வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு விபரம்*


*1.1.2016ல் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்*


  1.1.2015-ல் ரூ15480 1.1.2015-ல் ரூ 17650
(Pடீ-1)5200-20200-102800 ன்படி) (டீP-2)9300-34800-104200 ன்படி)



*01.06.2009க்குப் பின்பு நியமனம் செய்யப்பட்டபவர்கள்*
    
  1.1.2015-ல் ரூ10440 1.1.2015-ல் ரூ 161410
(Pடீ-1)5200-20200-102800 ன்படி) (டீP-2)9300-34800-104200 ன்படி)


*🌟மேற்கண்டவாறான ஊதிய வேறுபாடுகள் இதுவரை சரிசெய்யப்படாததால் தமிழக அரசின் எட்டாவது ஊதிய மாற்றக்குழுவின் அரசாணை எண்: 303 நிதி (ஊதியப்பிரிவு)துறை   நாள் : 11.10.2017ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய நிர்ணயத்தில் கீழ்க்கண்டவாறு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.*



*🌟1.1.2006-ல் நியமனம் பெற்றவருக்கு ஊதிய நிர்ணயம் 1.1.2006-க்குப் பின் ரூ15480-2.57-40800*



*🌟01.01.2006-ல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ 5400 இழப்பும் 1.6.2009ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை ஊதியத்தில் 15400 இழப்பும் ஏற்பட்டுள்ளது.  மேற்கண்டவாறான இடைநிலை ஆசிரியர்களின் பெரும் ஊதிய இழப்பு சரி செய்யப்பட ஒரு நபர் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட எங்கள் இயக்கத்தின் சார்பில் வேண்டுகிறோம்.*



*நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஊதியக்குறைபாடு:*


*🌟மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவை அமல்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் : 234 நிதி(ஊதியப் பிரிவு) நாள் : 01.06.2009ல் 6500 - 200 - 10500 என்ற ஊதிய விகிதத்தில் இருந்த ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு நிலை ஊதியம் (Pடீ2) 9இ300 - 34800105400புP என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பணிநியமனத்தில் தேர்வு நிலை ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்களைவிட பணியில் மூத்தோராக இருந்தும் 5300 - 150 - 8300 என்ற ஊதிய விகிதத்தில் பணியாற்றும் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பதவியை விட கூடுதல் ஊதியம் பெறும் பட்டதாரி ஆசிரியராக 5500 - 175-9900 என்ற ஊதிய விகிதத்தில் பதவி உயர்வு பெற்றதாலும் பணியில் மூத்த பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வு நிலைக்கான வாய்ப்பை இழந்துள்ளனர் மேலும் அவ்வாறு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவிஉயர்வு பெற்று 5900 - 200 - 9900 என்ற ஊதிய விகிதத்தில் இருந்து வந்தனர்.* 



*🌟அவ்வாறு பதவி உயர்வு பெற்றும் தற்போதுகல்வித்தகுதியிலும்ääபதவியிலும் பணி நிலையிலும் மூத்தோராக இருந்தும் (Pடீ2) 9300 - 34800-104700 என்ற ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வந்தார்கள்;.  இதனால் பணியில் மூத்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியில் இளைய தேர்வுநிலை ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்களைவிட அடிபடைப் ஊதியத்தில் ரூ.5000க்கும் மேல் குறைவாக பெறும் நிலை ஏற்பட்டது.  ஒரு நபர் குழு  இந்நிலையை பரிசீலனை செய்து தரநிலை ஊதியம் ரூ.5400 பெற்ற தேர்வு நிலை ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்களை விட அனைத்து நிலைகளிலும் பணி நிலையில் மூத்தோராக உள்ள நடுநிலைப்பள்ளி தலையாசிரியர்களின் தரநிலை ஊதியத்தை கடந்த ஊதியக்குழுவில் ரூ5400 ஆக படி உயர்த்தி 7வது ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்து வழங்கிட பரிந்துரை செய்ய எமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் வேண்டுகிறோம்.*



*இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்புப்படிகள்:-*


*🌟தமிழகத்தில் 1993-ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர்கள் அவரவர் நிலையில் சிறப்புப்படியாகப் பெற்றுவந்த ஒரு ஆண்டு ஊதிய உயர்வான ரூ30 ரூ50 ரூ60 ஆகியவை பற்றியும் கடந்த ஊதியக்குழுவில் தேர்வுநிலை சிறப்புநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ரூ500 சிறப்புப்படி பற்றியும் இந்த ஊதியக்குழு அமலாக்கம் தொடர்பான அரசாணைகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மற்ற துறைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புப்படிகள் இந்த ஊதியக்குழுவில் குறைந்தபட்சம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் உயர்த்தி வழங்கப்படாதது பாகுபாடாக உள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவந்த சிறப்புப்படிகளை உயர்த்தி வழங்கிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட வேண்டுகிறோம்.*



*இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம்:*


*🌟கடந்த ஊதியக்குழுவில் 2800 தரநிலை ஊதியம் பெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2011 முதல் வழங்கப்பட்டு வந்த தனி ஊதியம் ரூ750 ஆண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி கணக்கீடு உள்ளிட்ட அனைத்துப் பணப்பலன்களுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஆனால் இந்த ஊதியக்குழுவில் மேற்படி ரூ750 தனி ஊதியம் ரூ2000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி தொகை ரூ 2000 ஆண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி கணக்கீடு உள்ளிட்ட பணப்பலன்களுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.  இதனால் ஏற்கனவே பெற்றுவந்த பணப்பலனை இடைநிலை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள்.  இது தொடர்பாக ஒரு நபர் குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*




*தேர்வுநிலை சிறப்புநிலை:-*


*🌟இடைநிலை ஆசிரியர்கள் என்றில்லாமல் நியமனம் செய்யப்படும் அனைத்துப்பிரிவு ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேர்வு நிலை சிறப்பு நிலைக்கு அடுத்தடுத்த பதவி உயர்விற்கான ஊதிய விகிதம் வழங்கப்படவில்லை. ஆறாவது ஊதியக்குழு முதல் தேர்வுநிலை சிறப்பு நிலை பெறுபவர்களுக்கு 3மூ103மூ  ஊதிய உயர்வ வழங்கி நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இதனால் நியமனம் பெறும் ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்ற நாள் முதல் பணி நிறைவுபெறும் காலம் வரை ஒரே ஊதிய விகிதத்திலேயே தொடரும் அவலநிலை நீடிக்கிறது.  இது சமூக நீதிக்கும் இயற்கை நியதிக்கும் முரணானது.*



*🌟எனவே அனைத்துப்பிரிவு ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையிலிருந்தவாறு தேர்வுநிலை சிறப்புநிலைக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுக்கான ஊதிய விகிதங்கள் வழங்க பரிந்துரை செய்திட வேண்டுகிறோம்.* 



*பதவி உயர்வுக்கான ஊதிய உயர்வு:* 


*🌟தேர்வுநிலை அல்லது சிறப்புநிலையை எய்தும் நிலையில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது 3மூ ஊதிய உயர்வு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  ஆனால் தேர்வுநிலை சிறப்பு நிலைக்கு 3மூ103மூ ஊதிய உயர்வ அனுமதிக்கப்படுகிறது. இதனால் பதவி உயர்வினால் ஊதியத்தில் இழப்பு ஏற்படுகிறது. எனவே பதவி உயர்விற்கும் தேர்வுநிலைää சிறப்புநிலைக்கு அனுமதிப்பது போல் குறைந்தபட்சம் 3மூ103மூ   ஊதிய உயர்வு அனுமதிக்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.* 



*இதரபடிகள்:*


*🌟மலைப்பகுதிகள் பழங்குடியினர் பகுதி இமோசமான காலநிலைப்பகுதி ஆகிய பகுதிகளில் பணியாற்றும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது போன்று இதர ஈடுசெய்யும் படிகள் அளிக்கப்பட பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*பயணப்படி:*


*🌟தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு அளித்துள்ளதைப் போன்று பயணப்படிகள் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*வீட்டுவாடகைப்படி:*


*🌟மத்திய அரசு அளித்துள்ளது போன்று தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*குழந்தைகளுக்கான கல்விப்படி:*


*🌟மத்திய அரசு வழங்குவதைப்போல் தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விப்படிகள் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*




*மருத்துவப்படி:*


*🌟மத்திய அரசு வழங்குவதுபோல் தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.500 - மருத்துவப்படியாக வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*சிறப்பு ஊதியம்:*


*🌟தமிழ்நாட்டில்உயர்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு வழங்குவதைப்போல ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*ஓய்வூதியம்:*


*ஓய்வூதியம் தொகுத்து பெறுதல்*


*🌟ஓய்வுபெறும் ஆசிரியர்; அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை தொகுத்துப் பெறுவதை 40  சதவீதமாக வழங்கிடவேண்டும். தொகுத்துப்பெறும் தொகையை 15 ஆண்டுகள் பிடித்தம் செய்வதை மாற்றி அமைத்து 12 ஆண்டுகள் பிடித்தம் செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*முழு ஓய்வூதியம்:*


*🌟முழுஓய்வூதியம் பெறுவதற்கு 30 ஆண்டுகள் பணிக்காலம் என்பதை மாற்றி அமைத்து மத்திய அரசு வழங்குவதுபோல் 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*குடும்ப ஓய்வூதியம்:*


*🌟ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும் என்னும் நிபந்தனையை விலக்கிக்கொள்ள வேண்டும்.  நிரந்தர பணியிடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் மரணமடைந்தால் பணிக்காலத்தைக் கணக்கிடாமல் குடும்ப ஓய்வூதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*உயர் ஓய்வூதியம்:*


*🌟ஓய்வூதியர்களுக்கு 80 வயதுக்கு மேல் 100 வயது வரை படிப்படியாக உயர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  இதனை 65 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 65 வயது முதல் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் 10 சதவீதம் உயர் ஓய்வூதியம் அனுமதித்திட பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*

*🌟ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ1000 மருத்துவப்படியாக வழங்க வேண்டும்.  பணிக்காலத்தின் இறுதியில் பெற்றுவந்த வீ;ட்டுவாடகைப்படியில் ஒய்வுபெற்றபின் 50 சதவீதம் வீட்டு வாடகைப் படியாக பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



*விடுப்புக்கால பயணச்சலுகை:*


*🌟தற்போது வழங்கப்பட்டுவரும் விடுப்புகாலப் பயணச்சலுகை அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் கூடுதலாக நிதி அனுமதித்து பயணச்செலவை முழுமையாக ஈடுகட்டும் விதத்தில் வழங்கிட பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*




*கடன்களும் முன்பணமும்:*


*🌟கடந்த ஊதியமாற்றத்திற்குப்பின் அனைத்துவிலைவாசிகளும் உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கான கடனாக  நூறு  மாதச்சம்பளம் அல்லது   ரூ 50 லட்சம்*

*திருமண முன் பணம் : மகனுக்கு ரூ1லட்சம்
திருமண முன்பணம் : மகளுக்கு ரூ2 லட்சம்
கல்வி முன்பணம்   : பள்ளி கல்லூரிகள் செலுத்தக்கோரும் தொகை முழுவதும்மோட்டார் சைக்கிள்  கார்வாங்க  வாகனத்தின் முழுவிலையையும் வழங்க பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*



போனஸ்:


*🌟அனைத்து ஆசிரியர்களுக்கும் வருமான உச்சவரம்பின்றி ஒருமாத ஊதியத்தை போனஸாக வழங்கிட பரிந்துரைக்க வேண்டுகிறோம்.*


*🌟மேற்கண்டவாறான இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் படிகள் சிறப்பு ஊதியம் ஓய்வூதியம் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம்;  தொடர்பான கோரிக்கைகளை அரசுக்கு தாங்கள் பரிந்துரைக்க  வேண்டுகிறோம்.*



*🌟சமவேலைக்குச் சம ஊதியம் என்ற இயற்கை நியதியைக் கடைப்பிடித்து 1.1.2006 முதல் ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு அளித்த ஊதிய விகிதத்தினை முன் தேதியிட்டு அனுமதித்து அதன்படி 7வது ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்திட அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுகிறோம். மேற்கானும் எங்கள் அமைப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.*


இந்த மனுவினை (கடிதத்தினை) pdf வடிவில் காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் தோழர்களே...



                   

⚡தோழமையுடன்;

*_தோழர்.ச.மயில்_*      

*_மாநில பொதுச்செயலாளர்_*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*