புதன், 31 ஜனவரி, 2018
வே என்ற எழுத்தின் சிறப்பு
"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
பாம்பின் கால் பாம்பு அறியும். தமிழைக் கற்றவருக்கே தமிழின் இனிமை தெரியும்.
வாழ்க தமிழ்..
👆🏻💐💐💐💐
FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENTATION REG | SCHOOL TEAM VISIT & DISTRICT WISE TEACHER'S & BRTE'S LIST PUBLISHED...
புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின்பட்டியல் பள்ளிவாரியாக வெளியீடு.
70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'
'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.
'டெண்டர்' விடுவதில், ஏற்பட்ட பிரச்னைகளால், 2016 - 17ம் கல்வியாண்டு முதல், லேப் - டாப்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதிய பின், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' உள்ளிட்ட, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. இத்தேர்வுகளில், தமிழக பாடத்திட்டத்தில் இல்லாத, பல்வேறு கேள்விகள் இடம் பெறுகின்றன.அதற்கேற்ப, அரசு பள்ளிகளில் பயில்வோர், தங்களை தயார்படுத்திக் கொள்ள, லேப் - டாப்கள் மிக அவசியம். அதற்காக, அவசர தேர்வாக கருதி, 70 ஆயிரம் பேருக்கு, இலவச லேப் - டாப்களை, விரைவில் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக,
தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:நீட் தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் - டாப் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.
அதனால், இந்த கல்வியாண்டில் தரவேண்டிய, 5.43 லட்சம், லேப் - டாப்களில், முதல் கட்டமாக, 70 ஆயிரம் லேப் - டாப்களை, உடனடியாக கொள்முதல் செய்து, ஒரு மாதத்திற்குள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, புதிய, 'டெண்டர்' கோராமல், ஏற்கனவே, 'லேப் - டாப்'களை வினியோகித்துள்ள நிறுவனத்திடம், உடனடியாக கொள்முதல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு
பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய், 30 ஜனவரி, 2018
ஆசிரியர்கள் நியமனம்
*13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!*
அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.
விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.
குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசு தின கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் கொடிப்பங்கு நடு நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவின் ஒரு பகுதி.
திங்கள், 29 ஜனவரி, 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












